{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b9h32jsv/", "data": {"id": "b9h32jsv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9h32jsv/", "kind": "article", "headword": "ஆல்பா துகள்", "romanization": "ālpā tukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.447814+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பா துகள் (Alpha Particle) : ஹீலிய அணுவின் இரு எலக்ட்ரான்களையும் நீக்கியபின் எஞ்சியுள்ள உட்கரு ஆல்பா துகள் ஆகும்.", "body_ta": "ஆல்பா துகள் (Alpha Particle) : ஹீலிய அணுவின் இரு எலக்ட்ரான்களையும் நீக்கியபின் எஞ்சியுள்ள உட்கரு ஆல்பா துகள் ஆகும். இவை வெகு விரைவான, நேர் மின்தன்மை கொண்ட துகள்கள். அடிப்படையான மின்னேற்றமான எலக்ட்ரானின் ஏற்றத்தைப் போல் இரு மடங்கு ஏற்றமுள்ள இத்துகளின் நிறை ஒரு புரோட்டானின் நிறையைப் போல் சுமார் நான்குமடங்கு. இத்துகள்கள் வாயுக்களை அயானாக்கும் திறனுள்ளவை. இவைகளைக் கொண்ட ஆல்பாக் கதிர்கள் கதிரியக்கப் (த.க.) பொருள்கள் வெளியீடும் கதிர் வகைகளில் ஒன்று."}}