{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b5mmfaqq/", "data": {"id": "b5mmfaqq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b5mmfaqq/", "kind": "article", "headword": "ஆர்மோனியம்", "romanization": "ārmōṉiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.601852+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Harmonium) கட்டைகளைக் கொண்ட இசைக்கருவி.", "body_ta": "(Harmonium) கட்டைகளைக் கொண்ட இசைக்கருவி. இதில் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பல தகடுகள் இருக்கும். இத்தகடுகள் ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு சந்து இருக்கும். நெகிழ்வுள்ள நாக்கு ஒன்று இத்தகட்டை மூடியிருக்கும். கட்டையை அழுத்தினால் சந்தின் வழியே வரும் காற்று நாக்கைத் தள்ளிக்கொண்டு வெளிவரும்போது ஒலி தோன்றும். கருவியின் முன்புறத்திலுள்ள பிடிகளின் உதவியால் காற்று உட்புகும் வகையை மாற்றி நாதத்தின் பண்பை மாற்றலாம். துருத்தியைப் போடும் வகையை மாற்றி உட்புகும் காற்றின் அளவைக் கட்டுப்படுத்தி, நாதத்தின் அளவைக் குறைக்கவும் கூட்டவும் முடியும்.\n\nகிரீனி என்ற பிரெஞ்சுக்காரர் இதைக் கண்டு பிடித்தார். இது 19ஆம் நூற்றாண்டில் வழக்கத்திற்குவந்தது. இது இந்தியாவின் இசைமுறைக்கு ஏற்றதன்று."}}