{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b5fvebbd/", "data": {"id": "b5fvebbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b5fvebbd/", "kind": "article", "headword": "அகமது சா துரானி", "romanization": "akamatu cā turāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.056575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகமது சா துரானி ஆப்கானிசுதானத்தின் முதல் அமீராவார்.", "body_ta": "அகமது சா துரானி ஆப்கானிசுதானத்தின் முதல் அமீராவார். இவர் அப்தாமி இனத்தின் தலைவர், ஆப்கானியர்கள் பாரசீகத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஏனைய ஆப்கானியத் தலைவர்களை விட இவருக்குத்தான் மிகுந்த செல்வாக்கிருந்தது. பாரசீகத்தைச் சார்ந்த நாதர் சா கொலையுண்ட போது (கி.பி. 1747), ஆப்கானியத் தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து, அகமதுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அகமது தம் இனப் பெயரான அப்தாலி என்பதை மாற்றித் துரானி என்னும் பெயரைச் சூட்டிச் கொண்டார். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள்படும். இவரது ஆட்சியின் போது தில்லியில் நலிந்து மெலிந்திருந்த மொகலாயப் பேரரசைப் பன்முறை தாக்கி இலாகூர், காசுமீரம் போன்ற பகுதிகளை கி.பி. 1718-ஆம் ஆண்டில் கைப்பற்றினார். தில்லி நகரம் கி.பி. 1756-இல் இவரால் சூறையாடப்பட்டது."}}