{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b3xb36yw/", "data": {"id": "b3xb36yw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b3xb36yw/", "kind": "word", "headword": "மாணிக்கவாசகர்", "romanization": "māṇikkavācakar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:05.484217+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம் திருக்கோவையார் என்பவற்றின் ஆசிரியரும், சைவசமயாசாரியர் நால்வரு ளொருவருமான பெரியார்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாணிக்கவாசகர்"}, {"n": 2, "definition_ta": "இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். மூவர் முதலிகளான அப்பர். சம்மந்தர் சுந்தரருக்கு முற்பட்டவர். இதனை இவர் பாடியுள்ள திருவாசகத்தில் விநாயகரைப் பற்றி எந்தவித குறிப்பும் கூறாமை கொண்டும் பல்லவர்களைப் பற்றியும் குறிப்பிடாமை கொண்டும், கண்ணப்பர் சண்டேசுரர் ஆகிய பழைய அடியார்களை மட்டும் குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியலாம். மற்றும் பல காரணங்கள் உண்டு. கி.பி. 3ஆம் நூற்றாண்டினர். திருவாதவூரில் ஆமாத்திய பிராமணர் வகுப்பில் சம்புபாதாசிரியரின் புதல்வர். மதுரை அரிமார்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். திருப்பெருந்துறையில் ஆலயம் கட்டியவர். அத் தலத்தின் குருந்த மரத்தடியில் இறைவனால் ஞானோபதேசம் பெற்றவர். தில்லையில் முத்தி பெற்றவர். ஊமைப் பெண்ணைப் பேசவைத்தவர். இவர் பொருட்டு இறைவர் குதிரைச் சேவகராக வந்தார். நரிகளைக் குதிரைகளாக்கினார். வைகையில் நீர் பெருகச் செய்தார். மண்சுமந்து பிரம்படியும் பட்டார். இவர் பாடிய நூற்கள் திருவாசகம், திருக்கோவையார் என்பன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 620"}, {"n": 3, "definition_ta": "சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாசகம், திருக்கோவை ஆகிய தோத்திர நூல்களின் ஆசிரியர். அந்தணர் திருவாதவூர். வேறுபெயர் மணிவாசகர். சிறப்புப் பெயர் மணிமொழியார், கோவை வேந்தர். படி, ஞானத்தில் ஞானம் நெறி நன்னெறி, முத்திநிலை சாயுச்சியம். திருமுறை 8. முத்தியடைந்த வயது 32. காலம் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 222"}]}}