{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ayvjaep8/", "data": {"id": "ayvjaep8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayvjaep8/", "kind": "word", "headword": "மெய்கண்ட தேவர்", "romanization": "meykaṇṭa tēvar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.584976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சந்தானாசாரியர் நால்வருள் முதன்மையானவர். அருணந்தி சிவாசாரியரின் ஞானாசாரியார். சிவஞான போதம் என்னும் ஒப்புயர்வற்ற நூலின் ஆசிரியர். இவர் அச்சுத களப்பாளர் திருமகனார். சைவ வேளாண் குடியினர். பெண்ணாகடத்தில் பிறந்தவர். இவரது ஞானாசாரியார் பரஞ்சோதி முனிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவேதவனப் பெருமாள் என்பது. காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு. அருணந்தி சிவாசாரியர் முதல்முதல் இவரைச் சந்தித்தபோது,\"ஆணவமலத்தின் சொரூபம் எத்தகையது?\" என்று கேட்டதும், அவரையே ஏற இறங்கப் பார்த்துச் சும்மா இருந்து, அக் குறிப்பிலிருந்தே ஆணவமலத்தின் சொரூபத்தை அருணந்தி சிவாசாரியர் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்து, அவரது ஞானாசிரியராக விளங்கியவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}