{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/awecfjdn/", "data": {"id": "awecfjdn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/awecfjdn/", "kind": "article", "headword": "ஆதிமந்தி", "romanization": "ātimanti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.465123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதிமந்தி திருமாவளவன் எனச் சிறந்த கரிகாற் சோழன் மகள்.", "body_ta": "ஆதிமந்தி திருமாவளவன் எனச் சிறந்த கரிகாற் சோழன் மகள். சேரநாட்டரசன் ஆட்டனத்தியின் மனைவி. ஆட்டனத்தியைக் காவிரி கொண்டு செல்லக் கூவியரற்றிச் சென்றாள். மருதி என்பவளால் அவன் கரை சேர்க்கப்பட்டதையறிந்து அவனையடைந்தாள். இவள் பாடியது குறுந். 3; இவளது வரலாற்றை அகம் 45,76,222, 236, 276, 396-ல் அறியலாம்."}}