{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/am7gh6bz/", "data": {"id": "am7gh6bz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/am7gh6bz/", "kind": "article", "headword": "ஆஸ்ட்டிரோகார்ஸ்கி, மோயிசி யக்கோவ் லெவிக்", "romanization": "āsṭṭirōkārski, mōyici yakkōv levik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.824196+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(1854-1919) ரஷ்ய அரசியல் அறிஞர்.", "body_ta": "(1854-1919) ரஷ்ய அரசியல் அறிஞர். பீட்டர்ஸ்பர்க்கில் கல்வி பயின்று, சிறிதுகாலம் ரஷ்ய அரசாங்கத்தின் நீதி இலாகாவின் வெளியீட்டுப் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு பிரான்ஸ் தேசத்துக்குச் சென்று அரசியல் கலையில் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும் என்ற அவருடைய சிறந்த வெளியீடு பிரெஞ்சு மொழியில் 1902-ல் வெளியாயிற்று. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவர் சிறிது காலம் தங்கியிருந்தார்; 1906-ல் ரஷ்யாவுக்குத் திரும்பினார். அங்கு அவர் ரஷ்யச் சட்டசபையின் அங்கததினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோ. அ.]]"}}