{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/am4pjuth/", "data": {"id": "am4pjuth", "url": "https://nigandu.oliyonresearch.com/e/am4pjuth/", "kind": "article", "headword": "உண்டு செட்டு சிக்ரிடு", "romanization": "uṇṭu ceṭṭu cikriṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.154363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நார்வேநாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்.", "body_ta": "நார்வேநாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இவர், தென்மார்க்கிலுள்ள (Denmark) கல்லன் போர்க்கு என்னுமிடத்தில் கி.பி. 1882–ஆம் ஆண்டு மே 20–ஆம் நாள் பிறந்தார். இவர் தாய் தேனிய (Danish) நாட்டவர்; தந்தையார் நார்வே நாட்டைச் சார்ந்த இவ்வால்டு மார்ட்டின் உண்டுசெட்டு ஆவார். இவர் ஒரு தொல்லியல் வல்லுநர், இளமையிலேயே தம் தந்தையை இழந்தமையால், சிக்ரிடு (Undset Sigrid) கல்லூரிக் கல்வி பெறாது அலுவலகம் ஒன்றில் பணிபுரிய நேர்ந்தது. பணிபுரியுங் காலத்திலேயே கதைகள் முதலியன எழுதத் தொடங்கினார். அலுவலகப் பணியை\n\nஉண்டு செட்டு சிக்ரிடு\n\nவிடுத்து, முழு நேரமும் எழுதும் பணியில் ஈடுபட்டார். உரோமாபுரியிலுள்ள கலைமாணவரின் கதை பற்றிய ‘சென்னி’ (Jenny) என்னும் இவரது புதினம் இவருக்குப் புகழைத் தந்தது. இவர் ஆண்டர்சு, சி. சுவர்சுடென் என்னும் ஒரு கலைஞரை மணந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அவரை விட்டுப் பிரிந்தார். இவர் தம் 42–ஆம் வயதில் உரோமன் கத்தோலிக்கச் சமய வாழ்வினை மேற்கொண்டார். இவர் இடைக்கால நிலைமை பற்றிக் கூறும் ‘இரிசுடின் லெவரன்சுடட்டர்’ (Kristin – Lavransdatter) என்னும் வரலாற்றுப் புதினத்தினைப் படைத்தார். மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்ட இப்புதினம் மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்று இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தது. இது பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த வரலாற்றுப் புதின இலக்கியத்திற்காக இவருக்கு 1928–ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. செருமானியர் நார்வே நாட்டின் மேல் படையெடுத்த போது, இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தப்பிச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1945–ஆம் ஆண்டில் நார்வே நாடு திரும்பிய இவர், பல புதினங்களையும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் இயற்றினார். இவர் 67–ஆம் வயதில் (10.6.1949) நார்வேயிலுள்ள இலில்லி ஆமர் (Lille Hammer) என்னும் நகரில் காலமானார்."}}