{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a998g44f/", "data": {"id": "a998g44f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a998g44f/", "kind": "article", "headword": "ஆலமீடா", "romanization": "ālamīṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.752102+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம்.", "body_ta": "ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற்கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப்பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்றமளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945)."}}