{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a63yf5a9/", "data": {"id": "a63yf5a9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a63yf5a9/", "kind": "article", "headword": "அனாம்", "romanization": "aṉām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.379462+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது.", "body_ta": "அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது. இப்போது (1936) வியட்நாமின் ஒரு பகுதி. பரப்பு 56.974 மைல். மக் : சு. 71.84,000 (1948). பிரெஞ்சு ஐக்கியத்தில் உட்பட்ட நாடு வியட்நாம். அதன் அரசர் இங்கு வசிக்கிறார். தலை நகர் ஹ்வெ (Hue). மக் : சு. 40.000. முக்கிய விளை பொருள் அரிசி, பட்டு, தாமிரம், நாகம், தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன. இது இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் வசம் சிக்கி 1945-ல் மறுபடியும் பிரான்சிற்கு உரிமையாயிற்று."}}