{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a4k6a43c/", "data": {"id": "a4k6a43c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a4k6a43c/", "kind": "word", "headword": "வாயில் காட்சி", "romanization": "vāyil kāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:38.618819+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்திரியப் பிரத்தியட்சம். கண் முதலிய 5 பொறிகளையும் அவற்றிற்குத் துணையாய் வலிவுதந்து உடன்நிற்கும் தீ முதலிய 5 பூதங்களையும் அப்பூதங்களுக்குக் காரணமாய் அவற்றை விட்டு நீங்காது உடன் நிற்கும் தன் மாத்திரைகளையும் கொண்டு ஐயம், திரிபு, பெயர் முதலிய விகற்பமின்றி ஒரு பொருளை நிவிகற்பமாய் அறிதலாகும். இதிலுள்ள 6 வகைத் தொடர்புகளாவன 1)சையோகம், சம்யோகம்; கண்னினால் குடத்தைக் காணல். 2)சையுத்த சமவாயம், சம்யுக்தி சமவாயம் குட உருவத்தைக் காணல். 3)சையுத்த சமவேத சமவாயம் சமயுக்த சமவேதசமவாயம் உருவத் தன்மைப் பொதுத் தன்மையைக் காணுதல். 4) சமவாயம் - செவியால் ஒசையை உணர்தல். 5)சமவேத சமவாயம் - ஒசைத் தன்மையை உணர்தல். 6) விசேடண விசேடிய பாவம், விசேடணதா - அபாவத்தைக் (இன்மை) காணுதல். குடம் இல்லது இப்பூதலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 244"}]}}