{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a3s659qa/", "data": {"id": "a3s659qa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3s659qa/", "kind": "article", "headword": "கல்லச்சு எந்திரம்", "romanization": "kallaccu entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:24.226492+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "'லித்தோ' என்று சொல்லப்படும் இவ்வகை எந்திரம் மூலம் சுவரொட்டிகளும் பத்திரிகைகளும் அச்சிடப்படுகின்றன.", "body_ta": "'லித்தோ' என்று சொல்லப்படும் இவ்வகை எந்திரம் மூலம் சுவரொட்டிகளும் பத்திரிகைகளும் அச்சிடப்படுகின்றன. கல் அல்லது உலோகத் தகட்டில் படங்களையும் எழுத்துக்களையும் பதித்து அச்சிடுவது லித்தோ முறையாகும். இதில் அச்சிடும் பகுதி மேடுபள்ளமில்லாது சமதளப் பரப்பாகவே\n\nஇருக்கும் என்றாலும் இரு பகுதிகளுக்கும் வேதியியல் வேறுபாடு உண்டு. அச்சிடும் பகுதிகள் ஈரமாகும்போது நீரை விலக்கி மையை உறிஞ்சும். அச்சிடப்படாத பகுதிகள் நீரை உறிஞ்சி மையை விலக்கும்."}}