{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9z2mj4mh/", "data": {"id": "9z2mj4mh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9z2mj4mh/", "kind": "article", "headword": "ஆர் நதி", "romanization": "ār nati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.486728+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர் நதி (Aar) சுவிட்ஸர்லாந்திலுள்ள ஆறுகளில் மிகப் பெரியது.", "body_ta": "ஆர் நதி (Aar) சுவிட்ஸர்லாந்திலுள்ள ஆறுகளில் மிகப் பெரியது. அது இடையில் பிரீன்ஸ் ஏரியாகவும் தூன் ஏரியாகவும் பெருகிக்கொண்டு சென்று இறுதியில் ரைன் நதியில் சேர்கிறது. பிரீன்ஸ் ஏரி கப்பல் போகக் கூடிய ஆழமுடையது. ஆர் நதியின் நீளம் 181 மைல். சுவிட்ஸர்லாந்தின் பெரிய நகரங்களிலொன்றான பெர்ன் இவ்வாற்றின் கரையிலிருக்கிறது."}}