{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9ycrcq6u/", "data": {"id": "9ycrcq6u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ycrcq6u/", "kind": "article", "headword": "ஆல்பர்ட் ஏரி", "romanization": "ālparṭ ēri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.411296+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பர்ட் ஏரி முன்னர் ஆல்பர்ட் நயான்சா என்று வழங்கியது.", "body_ta": "ஆல்பர்ட் ஏரி முன்னர் ஆல்பர்ட் நயான்சா என்று வழங்கியது. நடு ஆப்பிரிக்காவிலுள்ளது. சுமார் 100 மைல் நீளம், சுமார் 25 மைல் அகலம். இதன் வடமூலையிலிருந்து ஒயிட் நைல் ஆறு புறப்படுகிறது. செமிஸ்கி ஆறு இதைத் தெற்கேயுள்ள எட்வர்டு ஏரியுடனும், விக்டோரியா நைல் ஆறு விக்டோரியா ஏரியுடனும் இணைக்கின்றன. யுகாண்டாவுக்கும் பெல்ஜியன் காங்கோவுக்கும் இடையில் 2028 அடி உயரத்தில் உள்ளது. இதன் இருப்பிடத்தை 1864-ல் சர் சாமுவேல் பேக்கர் கண்டுபிடித்து, விக்டோரியா அரசியின் கணவர் ஆல்பர்ட் இளவரசர் பெயரை இதற்கு இட்டார்."}}