{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9wamwn23/", "data": {"id": "9wamwn23", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wamwn23/", "kind": "word", "headword": "இதயத் துடுப்புச் சீரமைவுக் கருவி", "romanization": "itayat tuṭuppuc cīramaivuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.795330+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஒட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து இடது கீழறைக்குச் சென்று, அங்கு அழுத்தப்பட்டு நுரையீரலுக்குச் சென்று, அங்கு ஆக்சிஜன் பெற்று தூய்மையடைகிறது. தூய்மையடைந்த இரத்தம் வலது மேலறைக்கு வந்து, அங்கிருந்து வலது கீழறைக்குச் சென்று அங்கு அழுத்தப்பட்டு மகாதமனி வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்குச் செல்கிறது. மேலறைகளும், கீழறைகளும் சீரான ஒரே வேகத்தில் இயங்கும்போது இரத்த ஒட்டம் சீராக இருக்கும் வேகமே இதயத்துடிப்பு இந்த வேகத்தைச் சீர்படுத்த இதயத்தில் இயற்கையாகவே 'சினோட் ரியல் நோட்' (Sino-atrial node) என்ற அமைப்பு உள்ளது. நரம்பு உயிரணுக்களாலான இந்தச் சிறிய திசுப் பகுதி இதய இடது மேலறைச் சுவரில் இருக்கிறது. இதிலிருந்து எழும் துடிப்பு மேலறைகளும், கீழறைகளும் ஒரே சீராக இயங்க உதவுகிறது. இது சரியாக வேலை செய்யாதபோது, இதய இரத்த ஒட்டம் பாதித்து இதயக்கோளாறு ஏற்படுகிறது. இந்தக்கோளாறைச் சரிசெய்து இதயத் துடிப்பைச் சீராக்கு வதற்கு இந்தச் செயற்கைக் கருவி பொருத்தப்படுகிறது. இதில் லிதியம் அயோடினாலான மின்கலம் உள்ளது. இதன் எடை 40 கிராம் இருக்கும். மார்பில் இதயம் இருக்கும் பகுதியின்மீது சிறிய அறுவை மருத்துவம் செய்து, இக்கருவி தசைப்பகுதிக்குள் வைக்கப்படுகிறது. இதிலுள்ள மிக நுண்ணிய கம்பி (வயர்) இதயத் தசைப் பகுதியுடன் இணைக்கப்படுகிறது இதில் உள்ள மின்கலம் மூலம் கம்பி தூண்டுதல் பெற்று இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளிகளின் இதயம் மீண்டும் தானாகவே தன் பணியைத் தொடங்கிவிடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை வேலை செய்யும்.", "needs_definition": false, "gloss_en": "pacemaker", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இதய முடுக்கி", "வேக மூட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 792"}]}}