{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9uvxzm5n/", "data": {"id": "9uvxzm5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9uvxzm5n/", "kind": "article", "headword": "ஆர்ஸ்பினமீன்", "romanization": "ārspiṉamīṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.685329+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்ஸ்பினமீன் (Arsphenamine) : மருத்துவத்தில் இது 'சால்வர்சான்' என வழங்கும்.", "body_ta": "ஆர்ஸ்பினமீன் (Arsphenamine) : மருத்துவத்தில் இது 'சால்வர்சான்' என வழங்கும். இதன் ரசாயனப் பெயர் டை அமீனோ டைஹைடிராக்சி ஆர்சனோபென்சின் டைஹைடிரோகுளோரைடு. மேகநோய் முதலிய பாக்டீரியாப் பிணிகளுக்கு ஏற்ற மருந்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பால் எர்லிக் (த.க.) என்ற அறிஞர் தமது அறுநூற்றாறாவது சோதனையில் இதைக் கண்டுபிடித்தார். ஆகையால் இது '606' எனவும் வழங்கும். இதைத் தயாரிக்கவும், உடலில் ஊசி வழியாகச் செலுத்தவும் மிகுந்த கவனம் தேவை. ஆகையால் இதைவிட நிலையான பொருளும், வலிவு குறைந்த நஞ்சுமான நியோ சால்வர்சான் என்னும் மருந்து வழக்கத்திற்கு வந்தது.\n\nதற்போது இதையொத்த வேறு ஆர்சனிகக் கூட்டுக்களும் இந்நோய்களுக்கு மருந்துகளாக வழங்குகின்றன. பார்க்க: ரசாயனச் சிகிச்சை."}}