{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9tssmsph/", "data": {"id": "9tssmsph", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9tssmsph/", "kind": "word", "headword": "சைவசித்தாந்த வரலாறு", "romanization": "caivacittānta varalāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:19.188011+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவ வரலாறே சைவ சித்தாந்த வரலாறு. அது நீண்டது. நெடியது. வேதகாலத்திற்கு முற்பட்டது அதன் வரலாறு, வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவை திகமதங்கள் எனப்படும். அவை பௌத்தம், சமணம் முதலியவை. சிவனைச் சிறப் பிக்க எழுந்த ஆகமங்களே சிவா கமங்கள் அல்லது சைவ ஆக மங்கள், அவற்றின் வழிப்பட்ட சமயம் சைவம், சைவ சமயத்தில் தோத்திரங்களும் சாத்திரங் களும் உண்டு. தோத்திரங்கள் திருமுறை12.சாத்திரங்கள் மெய் கண்ட் நூல்கள் 14, பண்டார சாத்திரங்கள் 14. சாத்திரங் களில் தலைமையானது சிவ ஞான போதம். சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவத்தின் ஆணி வேர்கள். பாடியங்கள் வழி வளர்ந்த தத் துவ ஆராய்ச்சி தமிழ் நாட்டில் பரவிய நிலையில், சைவசித் தாந்த சாத்திரங்கள் தமிழில் தோன்றின. சைவசித்தாந்தம் வடமொழியிலுள்ள சைவாக மங்களையே மூலமாக உடை யது என்பது மரபு. உண்மையில் தமிழில் தோன்றிச் சிறப் புற்ற சித்தாந்த சாத்திரங்களால் தான் அது விளங்கி வருகிறது. ஆசிரியர்க்கு மாணாக்கர், மாணாக்காக்கு மாணக்கர் என இவ்வாறு வழிவழி வந்த அருளாளர்களது மரபினைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கொண்டவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 144"}]}}