{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9kgsfb7q/", "data": {"id": "9kgsfb7q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9kgsfb7q/", "kind": "article", "headword": "அங்கப்ப நாவலர்", "romanization": "aṅkappa nāvalar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.516324+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர்.", "body_ta": "விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர். இவர் செய்த நூல்கள் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் திருவூசல், பரசமய கோளரியார் திருவம்மானை, பரசமய கோளரியார் ஆசிரியப்பாமாலை முதலியன. பரசமய கோளரியார் பிற சமயங்களை வென்ற சைவப் பெரியார். திருநெல்வேலியில் அவர் வாழ்ந்தவர் என்பது பரசமய கோளரி பிள்ளைத் தமிழால் தெரிகிறது.\n\nதொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத்தூரில் சிறந்து விளங்கிய வேதகிரி முதலியாரின் மைந்தர்களால் சிறப்பிக்கப் பெற்றவராதலின், அங்கப்பநாவலர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம். த.கு.மு."}}