{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9jtnvugh/", "data": {"id": "9jtnvugh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jtnvugh/", "kind": "word", "headword": "வேங்கடராஜூலு ரெட்டியார்", "romanization": "vēṅkaṭarājūlu reṭṭiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.496131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் வைணவ சமயத்தவர். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைத் தமிழ் விரிவுரையாளராக இருந்து இது போது ஓய்வு பெற்றுள்ளவர். தெலுங்கு மொழியிலும் புலமை படைத்தவர். இவர் பன்மொழிப் புலவர் என்னும் சிறப்பும் உடையவர். இவர் தருமை ஆதீனத்தின் சார்பில் வரும் ஞானசம்பந்தன் என்னும் பத்திரிகை வாயிலாக இலக்கணச் சம்பந்தமான பல அரிய கட்டுரைகளை எழுதி வருகிறார். பரணர் என்னும் நூலால் இவரது ஆராய்ச்சித் திறனை உணரலாம். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 651"}]}}