{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/948p9zka/", "data": {"id": "948p9zka", "url": "https://nigandu.oliyonresearch.com/e/948p9zka/", "kind": "article", "headword": "ஆல்ஸ்பைஸ்", "romanization": "ālspais", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.600286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Allspice): இது ஒரு வாசனைப் பண்டம்.", "body_ta": "(Allspice): இது ஒரு வாசனைப் பண்டம். கருவாப்பட்டை, சாதிக்காய், இலவங்கம் இவை மூன்றின் மணமும் இதில் உள்ளதுபோல் தோன்றும். மேற்கு தீவுகளில் வளரும் பிமென்டோ என்னும் மரத்தின் உலர்ந்த கனி. இதற்கு ஜமெய்க்கா மிளகு என்பது பெயர். சமையலுக்கும் ஊறுகாய்க்கும் உதவும். குடும்பம்: மிர்ட்டேசி ; இனம் :பிமென்டோ அபிஷினாலிஸ் (Pemento officinalis)."}}