{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8w8frtz8/", "data": {"id": "8w8frtz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8w8frtz8/", "kind": "word", "headword": "செயல்தளக் கணக்கு", "romanization": "ceyaltaḷak kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.687470+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்கமுறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினிச் சேவை. பெரும் பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்கும். வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) வழியாக இணையத்தில் உலாவர இதில் வசதியில்லை. இணைய வசதிகள் அனைத்துமே எழுத்து/உரை அடிப்படை யிலான கருவிகள் மூலமே பெறமுடியும். இணையத்தில் உலாவ லின்ஸ்க் (Lynx) என்னும் உலாவியும், பைன் (pine) என்னும் மின்னஞ்சல் மென் பொருளும் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "shell account", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1325"}]}}