{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8rmn85qg/", "data": {"id": "8rmn85qg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8rmn85qg/", "kind": "article", "headword": "ஆனாய நாயனார்", "romanization": "āṉāya nāyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.741335+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்.", "body_ta": "பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்."}}