{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8p237ycr/", "data": {"id": "8p237ycr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8p237ycr/", "kind": "article", "headword": "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்", "romanization": "aḻakiya maṇavāḷapperumāḷ nāyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.610274+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு.", "body_ta": "அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு. 12ஆம் நூ.) வடக்குத் திருவீதிப் பிள்ளையினுடைய புதல்வர் ; பிள்ளைலோகாசாரியர்க்குத் தம்பியார் ; திருவரங்கத்தில் அவதரித்தவர்; பிரமசரிய நிலையிலிருந்தே துறவறம் பூண்டவர்; திருப்பாவை, திருவந்தாதி, கண்ணிநுண் சிறுத்தாம்பு இவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்; ஆசார்ய ஹிருதயம் என்ற நூலை (த. க.) இயற்றி, அதனைத் திருவரங்கத்தில் இறைவன்முன் அரங்கேற்றினார். பு. ரா. பு.]]"}}