{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8kf6mfga/", "data": {"id": "8kf6mfga", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8kf6mfga/", "kind": "article", "headword": "அசிர்கர்", "romanization": "acirkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.064488+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசிர்கர் என்பது ஒரு கோட்டை; தக்காணத்திலுள்ள காந்தேசம் (Khandesh) என்னும் பகுதியில் உள்ளது.", "body_ta": "அசிர்கர் என்பது ஒரு கோட்டை; தக்காணத்திலுள்ள காந்தேசம் (Khandesh) என்னும் பகுதியில் உள்ளது. இதனை மாளவ அரசர் கட்டினார் என்பர். இக்கோட்டை கட்டப்பெற்றுள்ள இடம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, அசிர்கர் (Asirgarh) கோட்டையைக் கைப்பற்ற எண்ணிய அக்பர் தம் வாழ்நாளின் இறுதியில் அதன் மீது படையெடுத்தார். இக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அக்பரால் இதைப்பிடிக்க இயலவில்லை. இறுதியாகப் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்து கி பி. 1601–இல் அசிர்கர் கோட்டையை அக்பர் கைப்பற்றினார். அசிர்கர் கோட்டையின் வாயிலைப் பொன் திறவுகோலால் அக்பர் திறந்தார் என்று இந்நிகழ்ச்சியை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்."}}