{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8j8m7yyu/", "data": {"id": "8j8m7yyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8j8m7yyu/", "kind": "article", "headword": "அழகிய சிற்றம்பலத் தம்பிரான்", "romanization": "aḻakiya ciṟṟampalat tampirāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.199259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் அம்பர் மாகாளம் என்னும் ஊரினர்.", "body_ta": "தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் அம்பர் மாகாளம் என்னும் ஊரினர். இவர் அழகிய சிற்றம்பல தேசிகர் என்றும் அழைக்கப்பட்டார். இவ்வூர் இப்போது திருமாலம் என்று வழங்கப்படுகிறது. இவர், தரும்புர ஆதினத்து எட்டாவது பட்டத்துக் குருமூர்த்தியாக விளங்கிய சுவாமிகளைக் குருவாகக் கொண்டு அம்மடத்தின் தம்பிரானாக இருந்தார்.\n\nஇவர் சுவர்க்கபுர மடத்தை நிறுவினார். இவர் தம் பெருமையை அறிந்த தஞ்சை மன்னர் இரண்டாவது பாபு சாகிபு ஏகோசி என்பவர், இவருக்கு நிலங்கள் மானியமாக வழங்கியுள்ளார். அரசி சுசானாபாய், இவர் நிட்டையிலிருக்கும் கோலத்தைக் கண்டு அருள் பெற்றதாகக் கனவு கண்டார் எனவும் சொர்க்கபுரம் வந்து இவரை நேரில் கண்டு வணங்கிச் சில மானியங்களை விடுத்துச் சென்றார் எனவும் வரலாறு கூறப்படுகிறது.\n\nஇவர் சிறந்த தமிழ்ப் புலமையுடையவராகத் திகழ்ந்தார். இவர் இயற்றிய நூல்கள் வருமாறு; திரிபதார்த்த தீபம், அறிவானந்த சமுத்திரம். அருட்பாமாலை, திருவுசாத்தானத் தோத்திரம், வினாவுரை, சித்தாந்த நிச்சயம், அனுட்டான விதி. இவர், தம் ஞானாசிரியர் மீது ‘கிளி விடு தூது’ என்ற நூலினையும் இயற்றியுள்ளார். இவரது காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு ஆகும்.வி.பா."}}