{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/86mcpdjx/", "data": {"id": "86mcpdjx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/86mcpdjx/", "kind": "word", "headword": "தாமோதரம் பிள்ளை", "romanization": "tāmōtaram piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.417763+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணத்தார். ஏழாலை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது போதகாசிரியர் சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர். புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தவர். பழந்தமிழ் நூல்களை ஏடு தேடிப் பதித்த பெரியார். வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உரை, தொல்காப்பியப் பொருளதிகாரம், இலக்கண விளக்கம், சூளாமணி, கலித்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பிய சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை முதலான நூல்களைப் பதிப்பித்தவர். அப்பதிப்புக்களின் முகவுரைகளில் இவரது ஆராய்ச்சிப் புலமையினை நன்கு அறியலாம். இவர் சைவ மககத்துவம் என்னும் நூலையும் இயற்றியவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 599"}]}}