{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/84tgq2xm/", "data": {"id": "84tgq2xm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/84tgq2xm/", "kind": "article", "headword": "அந்தர காந்தாரம்", "romanization": "antara kāntāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:34.369758+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அந்தர காந்தாரம் என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற சுரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும்.", "body_ta": "அந்தர காந்தாரம் என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற சுரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும். காந்தார சுரத்தின் மெலியது வலியது என்ற வேறுபாடுகளில் இது வலியதைக் குறிக்கும். இது ஒரு இயல்பு சுரமாகும். தம்பூராவைச் சீராகச் சுருதி கூட்டி மீட்டினால் அந்தர காந்தாரம் தெளிவாகக் கேட்கும். இது சங்கராபரண இராகத்தின் முழுமையான நியாசச் சுரமாகும். இந்துசுதானி இசையில் இது “பிலாவல் தட்” என்ற இராகத்திலும், மேனாட்டு இசையில் “மேசர் இசுகேல்” (Major Scale) என்ற பிரிவிலும் அமைந்துள்ளது. காந்தாரம் என்பதைப் பஞ்சமரபு நூல் கைக்கிளை என்று குறிப்பிட்டுள்ளது. காண்க: இசை."}}