{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/834n3jbm/", "data": {"id": "834n3jbm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/834n3jbm/", "kind": "article", "headword": "அங்காடி", "romanization": "aṅkāṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.594994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கடைத்தெரு, கடைக்கும் வழங்கும்.", "body_ta": "கடைத்தெரு, கடைக்கும் வழங்கும். இதனைக் கூலவீதி எனவும் கூறுவர். (சிலப்-இந்திர- 23 அரும்பத). இது நாளங்காடி அல்லங்காடி என இரு வகைப்படும். நாளங்காடி-காலைக்கடை. காவிாிப்பூம்பட்டினத்திலே பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரண்டிற்கும் நடுவே, மரங்கள் அடர்ந்த இடத்திலே, மரங்களின் அடியில் இருந்தது. (சிலப்-இந்திர 60-63). அல்லங்காடி-மாலைக்கடை. இது மதுரையில் பல்வேறு பறவைகளின் இசையெழுந்தாற்போன்ற ஆரவாரமுடையதாக இருந்த தென்று மதுரைக் காஞ்சி (544) கூறும். இருபெருநியமம் என்பதற்கு, நாளங்காடி அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடையதென்றார் என்று நச்சினார்க்கினியார் கூறுவர் (மதுரைக் 365)."}}