{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7spdw9rf/", "data": {"id": "7spdw9rf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7spdw9rf/", "kind": "word", "headword": "ஏ. ஆர். பீ", "romanization": "ē. ār. pī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.311811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டி. சிபி/ஐபி (TCP/ IP) நெறிமுறையின் ஒரு வடிவம். ஒரு குறும் பரப்பு பிணையம்இணையத்தில் தொடர்புகொள்ளும்போது ஐபி முகவரி (தருக்க முகவரி) யை மட்டுமே அறிய முடியும். அப்பினையத்திலுள்ள ஒரு கணினியின் மெய்யான வன்பொருள் (ஈதர் நெட்) முகவரியை அறிந்துகொள்ள ஏஆர்பி நெறிமுறை பயன்படுகிறது. இணையத்தின் வழியாக ஒர் ஏ. ஆர். பீ கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்போது, குறிப்பிட்ட ஐபி முகவரி கொண்ட கணுக் கணினி தன்னுடைய வன் பொருள் முகவரியோடு பதில் அனுப்பும். வன்பொருள் முகவரி கண்டறிதலைப் பொதுவாகக் குறித்தபோதும் எதிர்மறைப்பணியான ஆர்ஏஆர்பீ (Reversed ARP) சேர்த்தே குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "ARP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}