{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7rhhztjn/", "data": {"id": "7rhhztjn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7rhhztjn/", "kind": "article", "headword": "உதயணகுமார காவியம்", "romanization": "utayaṇakumāra kāviyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:51.009985+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.", "body_ta": "ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இக்காவியம் கொங்குவேளிர் இயற்றிய ‘பெருங்கதை’யின் வழிநூலாகும். பெருங்கதை மிக்க கல்வியுடையார்க்கன்றி மற்றவர் அறிதற்கியலாததாகவும், ஏடுகளை அரிதின் முயன்று தேடிக் கற்போருக்கல்லாது ஏனையோர்க்குக் கிடைத்தற்கரியதாகவும் இருந்தது. எனவே அப்பெருநூலில் அமைந்து விளங்கும் கதையினைத் தமிழ் மக்கள் அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் புலவர் ஒருவர் இக்காப்பியத்தை இயற்றியுள்ளார். இந்நூல் விருத்தயாப்பில் செய்யப்பட்டது. இது உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம் நரவாண காண்டம், துறவுக் காண்டம் ஆகிய ஆறு காண்டங்களையுடையது. இந்நூலை முதன் முதலில் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் 1935–இல் குறிப்புரையுடன் பதிப்பித்துள்ளார். அதன் முகவுரையில் இது ‘காப்பியவிலக்கணமுடையதன்று; இலக்கண வழுக்கள் உள்ளன; சந்த நயமும் பொலிவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை."}}