{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7hf8qmx7/", "data": {"id": "7hf8qmx7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7hf8qmx7/", "kind": "article", "headword": "அரிஅரன்", "romanization": "ariaraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:37.927885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திருமாலும் சிவனும் இணைந்த இறைவன்.", "body_ta": "திருமாலும் சிவனும் இணைந்த இறைவன். அரி என்பது திருமாலையும், அரன் என்பது சிவனையும் குறிக்கும் இறை வடிவங்கள் பலவாயினும், ‘ஒருவனே தேவன்’ என்னும் தத்துவத்தினை அரிஅரன் விளக்குகிறது. அரிஅரன் என்னும் உருவத்தின் வலப்பாகத்தில் சிவனுக்குரிய சிறப்புக் கூறுகளும் இடப்பாகத்தில் திருமாலுக்குரிய சிறப்புக் கூறுகளும் காணப்படும். அரிஅரன் நான்கு கைகளை உடையவர். வலப்பக்கத்தில் சடைமுடியையும் பிறை நிலவும் பெற்றிருக்கும் இவர், தலையின் இடப்பக்கத்தில் மகுடத்தினை அணிந்திருப்பார். வலப்பக்கக் காதில் பாம்புக் குண்டலமும் (காதணி) இடப்பக்கக் காதில் மகரகுண்டலமும் உடையவர். வலப்பக்கக் கைகள் ஒன்றில் வரத முத்திரையினையும், பிறிதொன்றில் திரிசூலமோ முரசோ மழுவோ மண்டையோடோ இருக்கும். இடப்பக்கக் கைகளில் சக்கரம், சங்கு,\n\nஅரிஅரன்\n\nதண்டாயுதம் ஆகியவற்றிலொன்றை வைத்திருப்பார். மற்றொரு கை கடக முத்திரையில் தொடையினைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சிவனுடைய ஊர்தியான நந்தி அரிஅரனின் வலப்பக்கத்திலும், திருமாலின் ஊர்தியான கருடன் இடப்பக்கத்திலும் இருப்பர். சில சிற்பங்களில் அரிஅரனுடன் பார்வதியும் இலக்குமியும் இருப்பர். அரிஅரன் நின்ற கோலத்திலிருப்பர்."}}