{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7bwz5wvk/", "data": {"id": "7bwz5wvk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bwz5wvk/", "kind": "article", "headword": "இல்லீரிகம்", "romanization": "illīrikam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.405546+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உரோமானியப் பேரரசுப் பகுதிகளுள் ஒன்று.", "body_ta": "உரோமானியப் பேரரசுப் பகுதிகளுள் ஒன்று. இக்காலத்தில் இப்பகுதியை யூகோசுலேவியா என்பர். பேரரசர் தயோகிளீ சியன் (Diocletian) என்பார் கி.பி. 293–ஆம் ஆண்டில் உரோமானியப் பேரரசை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அவற்றுள் ஒன்றை இல்லீரிகம் (Illyricum) என்பர். இப்பகுதியிலிருந்து பிற்காலத்தில் அரசாண்ட பேரரசர்கள் பலர், உரோமானியப் படைக்குப் படைவீரர்கள் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியும் இதுதான்."}}