{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7bdv7psj/", "data": {"id": "7bdv7psj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bdv7psj/", "kind": "article", "headword": "ஆதிரை", "romanization": "ātirai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.488429+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும்.", "body_ta": "ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும். சிவபெருமான் முத்தொழில்களையுஞ்செய்ய உருவங்கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர். அன்று சைவர்கள் களி செய்து உண்பர்.\n\n2 சாதுவன் என்னும் வணிகன் மனைவி; கற்பிற் சிறந்தவள்; மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் முதலிற் சோறு இட்டவள்."}}