{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7ajjyt9v/", "data": {"id": "7ajjyt9v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ajjyt9v/", "kind": "article", "headword": "ஆகன்காகுவா", "romanization": "ākaṉkākuvā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.288893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆகன்காகுவா: 1 தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைப்பகுதியிலுள்ள ஒரு மாகாணம்.", "body_ta": "ஆகன்காகுவா: 1 தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைப்பகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன.\n\n2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை, சிலி நாட்டுக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துளது. மேற்கு அர்த்த கோளத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி)."}}