{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/796uk3d8/", "data": {"id": "796uk3d8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/796uk3d8/", "kind": "article", "headword": "நூல் புழு வகையியல்", "romanization": "nūl puḻu vakaiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.789862+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நூல் புழுக்கள் நிமெட்டோடா என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தவை.", "body_ta": "நூல் புழுக்கள் நிமெட்டோடா என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தவை. வகையிலும், எண்ணிக்கையிலும், பல விதமான சூழ்நிலைக்கேற்பப் பரவிக் காணப் படும் தன்மையிலும், இவை ஏறத்தாழ பூச்சி வகைகளை ஒத்தவை. நூல் புழுக்களின் வகைகளைச் சார்பாகக் கொண்டு, அவற்றின் உடற்கூறு, இருப்பிடம், உணவு வகை, வாழ்க்கை நிலை, வளர்ச்சி, இனப் பெருக்கம், சூழ்நிலை முதலியவற்றை ஆராய்ந்தறிய முடியும். அவ்வப்போது மேற்கொள்ளப் படும் ஆராய்ச்சியின் பயனாக, முன்னரே ஏற்படுத்தியுள்ள வகைகளில் மாற்றங்கள் ஏற்படும் அல்லது புதியன புகுத்தப் படும். நூல் புழுக்களின் பெயர்களும், பொருத்தமான காரணங்களால் மாற்றத்திற்குள்ளாவதும் உண்டு. ஆனால், விலங்கியலில் பலராலும் ஏற்கப்படும் பெயரிடும் மரபிற்குட்பட்டே (International code of Zoological nomenclature) பெயர் வைப்பதும், மாற்றமும் செய்யப் படும்.\n\nநூல் புழுக்களின் பெயர் இரு பிரிவாக இருக்கும். முதற்பகுதி அது சார்ந்துள்ள தொடர்பை அல்லது இனத்தைக் குறிப்பதாகவும், இரண்டாம் பகுதி அந்த நூல் புழுவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பெயராகவும் அமையும். எ–டு: மிலாய்டொகைனி இன்காகினிடா (Meloidogune incognita).\n\nநூல் புழுவின் உடற்கூறு. ஏனைய இனங்களிலிருந்து பிரித்துக் கண்டறிய, நூல் புழுவின் உடல் கூற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. நூல் புழு மெலிந்து, நீண்டு புழுப் போல நுனியில் குறுகியிருக்கும். இதன் தோல் மேல் சவ்வில் நுண்ணிய வளைவுகள் காணப் படும். இந்தச் சவ்வு மூன்று அடுக்காக இருக்கும். உடலில் வாய்ப் பகுதியில், கடினமான குத்தூசி போன்ற அலகு இருக்கும். இதனைத் தொடர்ந்து அன்னக் குழாயும், அதன் ஏனைய பகுதிகளும், குடலும் அமைந்திருக்கும். கரு உறுப்புகளான முட்டைச் சுரப்பி (ovary), விந்துச் சுரப்பி (testis) ஆகியவை இருக்கும். பெண் கரு உறுப்பின் வழி சவ்வில் அமைந்திருக்கும். ஆசன வாய் குடலின் வெளிப் புறம் வழியாக வால் சவ்வில் இருக்கும்.\n\nஆண் நூல் புழுவில் விந்துச் சுரப்பியின் வழி, ஆசன வாயுடன் கூடி இருக்கும். விந்துச் சுரப்பியுடன், ஆண் குறி இணைந்து இருக்கும். சில ஆண் நூல் புழுக்களின் ஆசன வாயைப் பாதுகாக்க, விசிறி போன்ற சவ்வு (bursa) படர்ந்திருக்கும். முட்டைச் சுரப்பிகள் இரண்டு அல்லது ஒன்றாக இருக்கும். விந்துச் சுரப்பியும் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும். பல நூல் புழு வகைகளில் ஆண், பெண் இரண்டுமே புழு வடிவில் காணப் படும். ஆனால், சிலவற்றில் பெண் நூற்புழுக்கள் பெருத்துத் தடித்த உருண்டை போன்ற பல்வேறு அமைப்புக் கொண்டவையாய் இருக்கும். இவையே ஒட்டுண்ணி வாழ்க்கையை மேற்கொண்டுமிருக்கும்.\n\nவகைப்படுத்துதல். நூல் புழுக்களை வகைப்படுத்தலில் அவற்றின் உடற்கூறு இன்றியமையாதது. இதில் உடலமைப்பு, தோல் சவ்வின் மேலுள்ள வளைவு அமைப்பு, அதன் அளவு, அலகின் நீளம், வடிவமைப்பு, அன்னக் குழாயின் உருவமைப்பு, உணவுக் குழல் சுரப்பி (oesophageal gland), அது குடலின் மேல் பக்கத்தில் அமைந்துள்ள விதம் போன்றவை பொது உடற் கூறுகளாகும். பெண் கரு உறுப்பு அமைந்துள்ள இடம், முட்டைச் சுரப்பிகளின் பகுதிகள், எண்ணிக்கை, முட்டை வெளியில் தனித் தனியாக இடப் படுகிறதா, முட்டைச் சவ்வில் (egg matrix) இடப் படுகிறதா, முட்டைக் கூட்டினுள்ளேயே இருக்கிறதா போன்ற விவரங்கள், பெண் நூற்புழுவை இனம் காண <!--- Line repeated ---> உதவும். இதே போல், ஆண் நூற்புழுக்களின் வகையறிய, விந்துச் சுரப்பியின் எண்ணிக்கை, ஆண் குறியின் அமைப்பு, ஆசன வாயை மூடியுள்ள விசிறி போன்ற சவ்வின் நீளம், அமைப்புப் போன்றவை பயனாகும். சில நூற்புழு வகைகளில் முட்டை, பெண் புழுவின் கருப்பையின் உள்ளேயே பொரிந்து, பின்னர், புழு துளைத்துக் கொண்டு வருவதும் உண்டு.\n\nநூற் புழுவின் வகைப்பாடு\n\nஹெட்டிரோடிராய்டியா கிரிகோனிமெடாய்டிமா ஏடைலென்காய்டியா\n\nஸ்டிராங்கைலிடா அஸ்காரிடா\n\nடிரைகோடிராய்டியா\n\nமோனோஹிஸ்டிரிடா எனோபிளிடா டிக்டோபைமாட்டிடா\n\nc' = = X 100\n\nX 100\n\nSt = அலகின் நீளம்.\n\nSpicule - ஆண் உறுப்பு நீளம்\n\nh = வாலின் நுனியிலிருந்து நிறமற்ற பகுதி வரை உள்ள நீளம்\n\nV%R = உடல் முழுவதுமுள்ள வளைவுகளின் எண்ணிக்கை\n\nT% RB = ஒரு வளைவில் பருமன்\n\nRan = வால் நுனியிலிருந்து ஆசன வாய் வரை உள்ள வளைவுகள்.\n\nRvan = பெண் கரு உறுப்பு வாயிற்கும், ஆசன வாயிற்கும் இடையே வளைவுகள்\n\n* வளைவுகள் பெரியவையாகவும், துல்லியமாய் அறியக் கூடியவையாகவும் உள்ள சில மாறுபட்ட வகை உடற்புழுக்களுக்கு இது பயன் படும்.குறிப்பு: டைலென்சினாவின் (1) கீழுள்ள அனைத்து நூற்புழுக்களும், டோரிலெய்மிடாவின் (2) கீழுள்ள சில நூற்புழுக்களும் தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை. —சிவகாமி வடிவேலு"}}