{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6yv37hun/", "data": {"id": "6yv37hun", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6yv37hun/", "kind": "word", "headword": "வைப்பு முறை", "romanization": "vaippu muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.547365+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நூலாசிரியர் தாம் யாக்கும் நூலில் தாம் கூற விரும்பும் பொருளைத் தொகை வகை செய்து வைக்கும் பாங்கு எடுத்துக்காட்டாக, மெய்கண்டநூல்களில் மெய்ப் பொருள் வைப்பு முறை மாறு படுகிறது. சிவஞான போதத்தில் பதி, பாசம், பசு என எடுத்து பசு, பாசம், பதி என முடிக்கப்படுகிறது. இதே முறை சிவஞான சித்தியார் சுபபக்கத்திலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சிவப்பிரகாசத்திலும் திருவருட்பயனிலும் பதி,பசு, பாசம் என்று வைப்பு முறை உள்ளது.உண்மைவிளக்கத்தில் பாசம், பசு, பதி என்னும் வைப்புமுறை காணப்படுகிறது. இம்முறை தெரிந்ததலிருந்து தெரியாததற்குச் செல்வதால் புரிந்து கொள்வது எளிது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 254"}]}}