{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6rthmhj7/", "data": {"id": "6rthmhj7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6rthmhj7/", "kind": "word", "headword": "மீத்தொடுப்பு", "romanization": "mīttoṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.178871+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல், ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஒர் உறுப்புக்கும், அதே ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்பு அல்லது உரைநிரல் (Script) இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு. இத்தகைய தொடுப்புகள் பெரும்பாலும் நீல நிற எழுத்துகளில் (ஆவண எழுத்து நிறத்திலிருந்து மாறுபட்ட நிறத்தில்) அடிக்கோடிடப்பட்டிருக்கும். சுட்டிக் குறியை அருகில் கொண்டு சென்றால் கை அடையாளமாக மாறும். இந்த அடையாளங்களைக் கொண்டு அது ஒரு மீத்தொடுப்பு என்பதை அறியலாம். சுட்டியைக் கொண்டு தொடுப்பின்மீது சொடுக்கியதும், தொடுப்பில் சுட்டப்பட்டுள்ள ஆவணம் திறக்கும். எஸ்ஜி எம்எல், ஹெச்டிஎம்எல் போன்ற மீவுரைக் குறிமொழிகளில் உருவாக்கப்படும் மீவுரை ஆவணங்களில், பல்வேறு வகையான குறி சொல்கள் (tags) கொண்டு மீத்தொடுப்புகளைக் குறிப்பிடுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "hyperlink", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 718"}]}}