{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/65brb6wv/", "data": {"id": "65brb6wv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/65brb6wv/", "kind": "article", "headword": "அல்லி மரைக்காயர். ம", "romanization": "alli maraikkāyar. ma", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.292854+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.", "body_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாகூரில் பிறந்தார். மீறாலெப்பை மரைக்காயர் மகனாகிய இவர் அக்குபேரில் பஞ்சரத்தினம், நபிநாயகத்தின் மீது பதிகம், இமாம் அசைன் உசைனாண்டவர் பேரில் தசரத்தினம், முகியித்தீன் அப்துல் காதிர் ஆண்டவரவர்கள் பேரில் பதிற்றந்தாதி, கலறத்து சாகுல் அமீது ஆண்டவர் பேரில் நவமணி மாலை, வண்டுவிடுதூது, அன்னம் விடுதூது, அம்மானை, முனாசாத்து, நெஞ்சறிவுறுத்தல் என்னும் பத்து நூல்கள் எழுதினார். இப்பத்து நூல்களும் பிரபந்தக் கொத்து என்னும் பெயரில் கி.பி. 1878–இல் ஒரே தொகுதியாக அச்சாகியுள்ளது. இது 128 செய்யுட்களைக் கொண்டது. மேலும் இவர் நாகை வள்ளல் செய்னுல்லாபிதீன் மியாவைப்பற்றிப் ‘பங்கலாச் சிறப்புப் பதிகம்’ என்னும் நூல் ஒன்றும் பாடியுள்ளார். இது 14 செய்யுட்களைக் கொண்டது."}}