{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/649juw52/", "data": {"id": "649juw52", "url": "https://nigandu.oliyonresearch.com/e/649juw52/", "kind": "word", "headword": "அமைச்சரசு ஏய்ப்ப நின்று", "romanization": "amaiccaracu ēyppa niṉṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:59.784130+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமைச்சரோடு கூடி நிற்பவன் அரசன் , அதுபோல, அகக் கருவிகளோடு ஆன்மா கூடி நின்று, அஞ்சவத்தைப்படும். அதாவது, அரசன் உலாச் செல்லும் போது, அமைச்சர், படைத்தலைவர் முதலிய பலரும் சூழச் செல்லினும், உலாச் சென்று திரும்பிய பின், அரண்மனையுள் புகும்பொழுது, அவரவரை அவரவர் நிற்றற்குரிய இடங்களில் நிறுத்திவிட்டுக் கடைசியில் ஒரு காவலனை மட்டும் அந்தப்புர வாயிலில் நிறுத்தி, அப்புரத்தில் தான் மட்டும் செல்வான். அது போல, ஆன்மாவும் சாக்கிர அவத்தையில் நிற்கும்பொழுது, அனைத்துக் கருவிகளோடு கூடி, அனைத்தையும் அறிந்து செயல் புரிகின்றது. பின்னர், ஒய்வு கொள்ளும்பொழுது, அக்கருவிகளை அவ்வவற்றுக் குரிய இடங்களிலேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியே ஒய்வு பெறுதற்குரிய இடத்திலே சென்று ஒய்வு பெறும். “அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவத்தைத்தே' (சிபோ நூற்பா 4)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 25"}]}}