{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5kus26jz/", "data": {"id": "5kus26jz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5kus26jz/", "kind": "article", "headword": "அடக்கம்", "romanization": "aṭakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.897551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும்.", "body_ta": "பண்டைத் தமிழ்நாட்டில் விளங்கிய இசைக்கருவிகளுள் அடக்கம் என்பது ஒன்றாகும். இது தோற் கருவியாகும். இது வன்மைக் கருவி வகையினைச் சேர்ந்தது. இது ஒரு கடைக்கருவி (அதமமான ‘பறை’ என்னும் கருவியைப் போல) என்று கூறப்படுகிறது. இதனைப் புறப் புற முழவு என்பர். காளி, சாத்தன், காடுகாளி ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் கருவிகளுள் அடக்கம் என்பதும் ஒன்றாம்."}}