{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ju4c3s5/", "data": {"id": "5ju4c3s5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ju4c3s5/", "kind": "word", "headword": "சுந்தரர்", "romanization": "cuntarar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.158618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. அப் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் கூறுவர். திருநாவலூரில் ஆதி சைவ பிராமண மரபில் சடையனார், இசைஞானியர் என்பாருக்குத் தவப்புதல்வராய்ப் பிறந்தவர். இவரது திருமணத்தில் சிவபெருமானே வந்து, இவர் திருமணத்தை நடத்திக் கொள்ளாமல் படி தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவர். பின்னர்ப் பல தலங்களுக்கு யாத்திரை செய்தவர். அவ் யாத்திரையில் பரவையார், சங்கிலியார் என்ற மாதர்களைச் சிவனார் அருளால் மணந்தவர். பல அரிய பெரிய அற்புதங்களைச் சிவபெருமான் திருவருளால் நடத்திக் காட்டியவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை முதலையுண்ட பாலனை அழைத்தல், செங்கல்லைப் பொன் கல்லாகச் செய்தல், ஆற்றில் இட்ட பொருளைக் குளத்தில் எடுத்தல் முதலியன. இவர் பாடிய தேவாரப் பதிகங்கள் 37000. ஆனால், இன்று உள்ளவை 100 பதிகங்களே. காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. இவரது பாடல்கள் பலவகையான நயங்களைக் கொண்டு விளங்குவதால், \"நயத்துக்குச் சுந்தரனார்\" என்று இவரைச் சிறப்பித்துப் பேசுவர். கல்வியின் பொருட்டு இவரது நட்பைச் சிவபெருமான் பெற்றார் என்றால், இவரது பெருமையைக் கூறவும் வேண்டுமா? அதன் பொருட்டுத் தம்பிரான் தோழர் என்றும் பெயரையும் பெற்றவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 593"}, {"n": 2, "definition_ta": "ஆதிசைவர். சிறப்புப் பெயர்கள்; அருளுடை நம்பி, வண்தொண்டன் தம்பிரா தோழர், சேரமான் தோழர் திரு நாவலுர் நடுநாடு. சிவனுடன் தோழமை பூண்டு தலந்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி சைவநெறி தழைக்கப் பாடுபட்டவர். திருவாரூர் மதவாகிரி தேவாசிரியா மண்டபத்தில் திருத்தொண்டர் தொகைபாடி அடியார் வரலாற்றை உலகறியச் செய்தவர். இது பெரிய புராணம் தோன்ற வழிவகுத்தது குருவழிபாடு. நால்வரில் ஒருவர். வேறுபெயர் சுந்தர மூர்த்தி நாயனார். இவர் வாழ்க்கை தோழமை நெறிக்கு எடுத்துக் காட்டு, முத்தியடைந்த வயது 18. காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. முதலில் பாடியபதிகம் \"பித்தா பிறை\" இறுதியாகப் பாடியது 'தானெனைமுன்’ சூடி பாடிய பதிகத் தொகை 38,000. இன்றுள்ள பாடல்கள் 1038. திருமுறை7. சுந்தரர் செய்த அற்புதங்கள்; 1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது. 2) சிவ பெருமான் கொடுத்தருளிய 12,000 பொன்னை விருத்தாசலத்திலுள்ள ஆற்றிலே போட்டுத் திருவாரூர் திருக்குளத்தில் எடுத்தது. 4)காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. 5) முதலை உண்ட பாலனை அம்முதலை வாயினின்று மீட்டுக் கொடுத்தது. 6)பரவைக்காகதச் சிவபெருமானைத் தூதுராக அனுப்பியது. 7) வெள்ளையானையில் ஏறிக் கொண்டு திருக்கயிலை சென்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}]}}