{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hduumzu/", "data": {"id": "5hduumzu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hduumzu/", "kind": "word", "headword": "நக்கீரர்", "romanization": "nakkīrar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.684608+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நல்ல மொழிகளைப் பேசிய காரணத்தால் நக்கீரர் எனப்பட்டார். இவரது தந்தையார் மதுரையில் கணக்காயர் (ஆசிரியர்) தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால் இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று கூறப்பட்டவர். தமிழ்ச் சங்கப் புலவர்களின் தலைவர். இறையனார் அகப்பொருளுக்குச் சிறந்த உரை கண்டவர். வேளாப் பார்ப்பனர் என்னும் மரபினர். தமிழ் மொழியினை எவரேனும் இழிவாகக் கூறின் அவர்களே அழியும் வண்ணம் தமிழ்பாடும் ஆற்றல் மிக்கவர். அப்படியே கொண்டான் என்னும் குயவன், வடமொழி உயர்ந்தது என்று கூறக்கேட்டு, அவன் சாவுமாறு பாடிப், பின்னர் பலர் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் உய்யுமாறும் பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் நூற்களும் இவரால் பாடப்பட்டவைகளே.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 603"}]}}