{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ed5wwap/", "data": {"id": "5ed5wwap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ed5wwap/", "kind": "word", "headword": "காகிதமற்ற அலுவலகம்", "romanization": "kākitamaṟṟa aluvalakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.531012+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காகிதமற்ற அலுவலகம் பற்றி நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக் கதையாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப்பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடியிருக்கிறது. மேலும் காகித ஆவணமே இப்போதும் பரிமாற்றங்கள்மூலம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. சமயத்தில் அதிக சேமிப்பும் துல்லியத் திரைகளும் உள்ள கையகக் கணினிகள் பயணம் செய்யும் போது காகிதத்திற்கு மாற்றாக உள்ளன. ஒளி இழை கட்டமைப்புகள், தரவு, படம், குரல் மற்றும் காட்சியை விரைவாக அனுப்ப உதவுகின்றன. வண்ண லேசர் அச்சுப்பொறிகள் எங்கும் பரவி உள்ளதால், எத்தகைய சிக்கலானதாக இருந் தாலும், ஆவணத்தை மீண்டும் உருவாக்குவது எளிதானதே", "needs_definition": false, "gloss_en": "paperless office", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாளிலா அலுவலகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1076"}]}}