{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ctga9qr/", "data": {"id": "5ctga9qr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ctga9qr/", "kind": "word", "headword": "பரிபாடல்", "romanization": "paripāṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.523197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்க நூற்களுள் ஒன்றான எட்டுத்தொகை நூற்களுள் இது ஒரு நூலாகும். பரிபாடல் என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு வகைப் பாடல். அப்பாடலால் இந்நூல் அமைந்துள்ளமையின் இப்பெயர் பெற்றது. இதில் எழுபது பாடல்கள் இருந்தன. ஆனால் அவற்றுள் 24 பாடல்களே கிடைத்தன. இந்நூலில் முருகப்பெருமானைப் பற்றியும், திருமாலைப் பற்றியும், மதுரையைப் பற்றியும், வைகையைப் பற்றியும், கூறப்பட்ட பாடல்களே உண்டு. இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கங்கள், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலை, வைகை நதி, மதுரையம்பதி ஆகிய இவற்றின் இயற்கை வளன் முதலியவற்றை நன்கு அறியலாம். திருமாலின் பெருமைகளையும், திருமுருகன் மாண்புகளையும் உணரலாம். அகப்பொருட் சிறப்பு அதிகமாக இதில் பேசப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 531"}]}}