{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5c2ry325/", "data": {"id": "5c2ry325", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5c2ry325/", "kind": "article", "headword": "நெளி சிரை ஒழுக்கு", "romanization": "neḷi cirai oḻukku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.441535+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிரை விரிவடைந்தும், நெளிந்தும், குருதி ஒழுக்குடனும் காணப் பட்டால், அது நெறி சிரை ஒழுக்கு (bleeding varices) எனப் படும்.", "body_ta": "சிரை விரிவடைந்தும், நெளிந்தும், குருதி ஒழுக்குடனும் காணப் பட்டால், அது நெறி சிரை ஒழுக்கு (bleeding varices) எனப் படும். இந்நிலை, பொதுவாகக் கால்களில் ஏற்பட்டாலும், விரை நாளம், உணவுக் குழல், குத–மலக் குடல் ஆகியவற்றின் சிரைகளும் இந்நிலையை அடையலாம். நிமிர்ந்து நிற்பதால், நெளி சிரை நிலை ஏற்படுகிறது. விலங்கினங்களில், இந்நிலை காணப் படுவதில்லை. தசைகளின் விரைப்புத் தன்மையும், சுருங்கும் தன்மையும் சிரைக் குருதியை, இதயத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. ஆகவே, பிறவியிலேயே தடுக்கிதழ் இல்லாமை, தசைத் திறன் குறைவு, தசைச் சூம்பல், ஆழ் திசுத் தகட்டு இறுக்கும்ஆகியவை நெளி கீரைக்கு அறிகுறிகளாகின்றன. நிற்கும் போது, காலிலிருந்து இதயம் வரையுள்ள குருதியின் முழு எடை, சிரைத் தடுக்கிதழ்களைப் பாதிக்கிறது. சாஃபீன–தொடைச் சிரை, சாஃபீன பொதுத் தொடைச் சிரை, சஃபீன–முழங்கால் பின் பள்ளச் சிரை ஆகியவற்றில் காணப் படும் தடுக்கிதழ்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன.\n\nதடுக்கிதழ்கள் செயலிழக்கும் போது, ஆழப் பகுதியிலிருந்து குருதி மேற்பகுதிக்கு ஒழுகி வருகிறது. இதனால், வலி உணர்வும் சோர்வும் உண்டாகின்றன. கால் வலியும், கணுக்கால் வீக்கமும், தோலில் அரிப்பும், சிலருக்கு இரவில் தசைப் பிடிப்பும் உண்டாகின்றன. நெளி சிரைகளை முழுமையாக ஆய்வு செய்வதிலேயே, இதற்குண்டான மருத்துவத்தின் வெற்றி அமைகிறது.\n\nமருத்துவம். சிரைகளைக் கடினமடையச் செய்யும் ஊசி மருந்துகளாக, எத்தனாலமின் ஓலியேட் 5%, சோடியம் டெட்ராடிசைல் சல்ஃபேட் 3% ஆகியன பயன் படுகின்றன. அறுவை முறைகளும் கையாளப் படுகின்றன. நெளி சிரை வெடிப்பால் உண்டாகும் குருதிப் பெருக்கு, கூடுதலாகவே இருக்கும். காலை உயரமாகத் தூக்கி வைத்து, இறுக்கமான கட்டுப் போட்டு, நெளி சிரை ஒழுக்கை நிறுத்தலாம். எக்காரணம் கொண்டும் டூர்ணிகே (tourniquet) எனப் படும் .இறுக்குக் கட்டைப் போடக் கூடாது. —சாரதா கதிரேசன் துணை நூல். A.J. Harding Rains and. H.David Ritchie (Eds), Bailey & Love’s Short Practice of Surgery, Seventeenth Edition, H.K. Lewis & Co.Ltd., London, 1977."}}