{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5ar9k2bz/", "data": {"id": "5ar9k2bz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5ar9k2bz/", "kind": "article", "headword": "ஆல்பயெரி", "romanization": "ālpayeri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.374652+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பயெரி (Alfieri, 1749 - 1803) இத்தாலி நாட்டின் தலைசிறந்த நாடகக் கவிஞர்.", "body_ta": "ஆல்பயெரி (Alfieri, 1749 - 1803) இத்தாலி நாட்டின் தலைசிறந்த நாடகக் கவிஞர். அவருடைய நாடகங்களுள் பல பகுதிகள் மிகுந்த எழில் வாய்ந்தவை. அவர் முன்னேற்றமான கொள்கைகள் உடையவர். அவர் இயற்றிய புரூட்டஸ், திமோபின், வர்ஜினியா போன்ற நாடகங்கள் நாட்டுப்பற்றை எழுப்பியதன் பயனாகப் பிளவுபட்டுக்கிடந்த இத்தாலி ஒன்றுபட்ட நாடாக ஆயிற்று. அவருடைய சால் என்னும் துன்ப நாடகம் புகழ் வாய்ந்ததாகும். சிலர் சால் என்பதையும் சிலர் மிர்ரா என்பதையும் அவருடைய தலைசிறந்த நாடகமாகக் கூறுவர்."}}