{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/53k9ertz/", "data": {"id": "53k9ertz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/53k9ertz/", "kind": "article", "headword": "அழகிய மணவாளச் சீயர்", "romanization": "aḻakiya maṇavāḷac cīyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.224762+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் திருவரங்கத்தில் வாழ்ந்தவர்.", "body_ta": "கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் திருவரங்கத்தில் வாழ்ந்தவர். பெரியவாச்சான் பிள்ளையின் மாணவரான இவர் ஒரு துறவி. சமயக் கல்வி சிறந்து, பரசமய கோளரியாக விளங்கியதால் ‘வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவர் திருவாய்மொழிக்குப் பன்னீராயிரப்படி என்னும் விளக்கவுரையும் திருவிருத்தத்திற்குத் திருவிருத்த வியாக்கியானம் என்னும் விளக்கவுரையும் எழுதியுள்ளார். ‘தத்துவ தீபப் பிரகாசம்’, ‘சாரீர கைக் கண்டியம்’, ‘பகவத் கீதை வெண்பா’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்."}}