{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4uyx9q8s/", "data": {"id": "4uyx9q8s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4uyx9q8s/", "kind": "article", "headword": "சுவாசக் குழாய்", "romanization": "cuvācak kuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.240218+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மூக்கின் வழியே நுழைந்த காற்றை, இரு பக்க நுரையீரலுக்கும் அனுப்பும் செயலாகிய சுவாசித்தலைச் செய்யும் உறுப்பு சுவாசக் குழாய் (trachea) எனப்படும்.", "body_ta": "மூக்கின் வழியே நுழைந்த காற்றை, இரு பக்க நுரையீரலுக்கும் அனுப்பும் செயலாகிய சுவாசித்தலைச் செய்யும் உறுப்பு சுவாசக் குழாய் (trachea) எனப்படும். ஆறாம் கழுத்து முள் எலும்பிற்கு முன் புறம் உள்ள கிரிக்காய்டு குருத்தெலும்பிலிருந்து இது தொடங்கு- கிறது. குரல் வளைப் பகுதி, சுவாசக் குழாயாக மாறி, ஐந்தாம் மார்பு முள் எலும்பு வரை நீண்டு, பின் இரு வளி நாளியாக மாறுகிறது. 11—13 செ. மீ. நீளமுள்ள இக்குழாயின் பின் பகுதி தட்டைச் சவ்வால் ஆனது. முன் பகுதி C வடிவுள்ள குருத்தெலும்புகளால் ஆனது.\n\nகழுத்துப் பகுதியில், சுவாசக் குழாயின் முன்புறம் தைராய்டு இணைப்புப் பகுதியும், இரு மேல் தைராய்டு தமனிகளும் இணைகின்றன. கழுத்துப் புயத் தமனியும், தைமஸ் சுரப்பியும் கீழ்ப் பகுதியில் காணப்படும். மார்பெலும்பு ஹயாய்டு, மார்பெலும்பு தைராய்டு தசைகளும், கீழ் மென்தோலும், கழுத்துப் பகுதிச் சுவாசக் குழாயின் மென்தோலும், தோலை மூடியுள்ள பக்கவாட்டுத் தைராய்டு சுரப்பியின் மடலும், கீழ் தைராய்டு தமனியும், பொதுத் தலைத் தமனியும், உறையும் காணப்படும்.\n\nமார்புப் பகுதியில், சுவாசக் குழாயின் பின் பகுதியில் உணவுக் குழலும், முன்புறம் மார்பெலும்பின் மேற்பகுதியும், அங்கிருந்து தொடங்கும் மார்பெலும்பு ஹயாய்டு மார்பெலும்புத் தைராய்டு தசைகளும், தைமஸ் சுரப்பியும், பெருந்தமனி வளைவும், கழுத்துப் புயத் தமனியும், பொதுத் தலைத் தமனியும், இடக் கழுத்து புயச் சிரையும், இதைக் கடக்கும், அக இதய நரம்புப் பின்னலும் காணப்படும். இடப்புறம் பெருந்தமனி வளைவு, இடக் காரையடித் தமனி (subclavian), இடப் பொதுத் தலைக் தமனி, இட மேல் நோக்கிச் செல்லும் தொண்டை நரம்பும் காணப்படும். வலப் புறம் அசைகாஸ் சிரை வளைவு, வல வேகஸ் 10ஆம் கபால நரம்புக் கழுத்துப் புயத் தமனி ஆகியன காணப்படும்.\n\nநிண நீர் ஓட்டம். சுவாசக் குழாயின் முன் புறம் பக்கவாட்டுக் கணுக்களுக்குச் செல்கிறது.\n\nவேற்றுப் பொருள்கள், தற்செயலாக மூக்கின் வழிச் செல்லும் பொருள்கள் ஆகியன வல வளி நாளியைச் சுவாசக் குழாய் வழியே அடையும். இதற்கு முக்கிய காரணம் இதன் அளவு வளி நாளியை விடப் பெரிதாக இருப்பதாலும், சுவாசக் குழாயுடன் நேரடியாகத் தொடர்புறுவதாலுமேயாகும். சுவாசக் குழாயின் மேற்பகுதியில் ஏற்படும் பல்வேறு விரணம், சுவாசத் தடைகளுக்குச் சுவாசக் குழாயில் துளையிட்டுச் சுவாசத்தைச் சீராக்கலாம். வளி நாளியில் சுவாசக் குழாய்ப் புற்று, வேற்றுப் பொருள் இவற்றைக் கண்டு பிடிக்கவும், ஆய்வுக்காகவும் வளி நாளி அ௧ நோக்கியைப் பயன்படுத்தலாம். —மா.ஜெ. பிரடெரிக் ஜோசப் நூலோதி. G.J. Romanes, Cunninghams Text Book of Anatomy, Tweflth Edition, Oxford University Press, Oxford, 1981."}}