{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ud5ybvm/", "data": {"id": "4ud5ybvm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ud5ybvm/", "kind": "article", "headword": "அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன்", "romanization": "aḻakaṉ perumāḷ kulacēkaraṉ allatu cīvallapaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.186766+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திருநெல்வேலிப் பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டியன்.", "body_ta": "திருநெல்வேலிப் பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டியன். அரிகேசரி பராக்கிரம பாண்டியனுடன் இவனும் வீரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், சடிலவர்மன் குலோத்துங்க பாண்டியன் ஆகியோரும் இணைந்து ஆட்சிபுரிந்தனர். அரிகேசரி பராக்கிரமனின் தம்பியான இவன், வரதுங்கனுடன் இணைந்து புதுக்கோட்டைச் செப்பேடுகளை வெளியிட்டான். இவனது கல்வெட்டுகள், திருநெல்வேலி செங்கோட்டைப் பகுதிகளில் உள்ளன. தன் அண்ணனால் தொடங்கப்பெற்ற தென்காசிக் கோயில் திருப்பணியை இவள் முற்றுப்பெறச் செய்தான். இக்கோயிலின் வடபுறம் விட்டுணு கோயில் ஒன்றையும் கட்டுவித்தான்."}}