{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4rj7p9x2/", "data": {"id": "4rj7p9x2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4rj7p9x2/", "kind": "word", "headword": "தலைகீழ்ப் பட்டியல் தரவுத் தளம்", "romanization": "talaikīḻp paṭṭiyal taravut taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.594712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் தகவல்களின் ஒத்திசைவு, ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவது கடினம். தலைகீழ்ப் பட்டியல் அட்டவணையில் இடை வரிசைகள் (அல்லது ஏடுகள்) ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் வரிசையாக்கங்களின் மூலம் எவ்வித வரிசை முறை ஆக்கப்பட்டிருப்பினும் இது மாறாது. இரு அட்டவணைகளுக்கிடையே சுமத்தப்படும் தருக்கமுறை இணைப்பு, நிபந்தனை அடிப்படையிலும் தரவுத் தளத்தை வரிசைப்படுத்தலாம். எந்தப் புலத்தையும் எத்தனை புலங்களையும் தேடு புலமாகக் கொள்ளலாம். தேடு புலம் தனித்தோ பல சேர்ந்தோ இருக்கலாம். போலிகை (Duplicate) ஏடுகள் இருக்கக் கூடாது, உறவுடைய இரு அட்டவணைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவு (integrity) கட்டாயம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. அட்டவணைகளோ, வரிசையாக்கக் கோப்புகளோ பயனாளருக்குப் புரியாது", "needs_definition": false, "gloss_en": "inverted - list database", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 249"}]}}